சிறிலங்காவுக்கு மீண்டும் வரவுள்ள முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுக்கு இராணுவக் கொமாண்டோக்களின் பாதுகாப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
மிகவும் முக்கிய இலக்காக கோத்தபாய ராஜபக்ச காணப்படுவதால் அவருக்கு இராணுவ கொமாண்டோ பாதுகாப்பு வழங்கப்படும்.
24ஆம் திகதி கோத்தபாய ராஜபக்ச சிறிலங்கா வருதாக தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும் பாதுகாப்பு காரணங்களிற்காக அவர் இலங்கைக்கு திரும்பி வரும் திகதியில் மாற்றங்கள் செய்யப்படலாம்.
பல நாடுகளில் புகலிடம் பெறுவதற்கான அவரின் கோரிக்கைகள் மறுக்கப்பட்ட நிலையிலேயே அவர் நாடு திரும்புகின்றார்.
முன்னாள் ஜனாதிபதி அரசாங்கத்தின் வீடொன்றை கோரமாட்டார் அவர் மிரிஹானவில் உள்ள வீட்டிலேயே வசிப்பார் என அவரின் குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post