சிறிலங்கன் எயார்லைன்ஸ் எந்த வகையிலும் விற்கப்படாது, மறுசீரமைப்பு மட்டுமே செய்யப்படும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா (Nimal Siripala de Silva) தெரிவித்துள்ளார்.அதிபர் ஊடக மையத்தில் இன்று (3) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் 49% பங்குகளை வேறு நிறுவனத்திற்கு வழங்க முடியும் எனவும், ஆனால் பொருத்தமான முதலீட்டாளர் இதுவரை முன்வரவில்லை எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இலங்கை-இந்தியா கப்பல் சேவைஇதேவேளை, பாரிய நட்டத்தை சந்தித்து வரும் மத்தள விமான நிலையத்தின் நிர்வாகம் அடுத்த சில வாரங்களுக்குள் ரஷ்ய – இந்திய கூட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் அமைச்சர் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன், அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கப்பல் சேவை மிக விரைவில் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவித்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post