டெங்கு, இன்புளுவென்ஸா மற்றும் கொரோனா முதலான நோய்கள் சிறார்களிடையே பரவும் அபாயம் தற்போது உள்ளது என்று சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நோய் நிலைமைகளுக்கு உள்ளாகும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று சிறுவர் நோய் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கொரோனா பரவலானது தற்போதும் சமூகத்தில் உள்ளது. பரிசோதித்து பார்த்தால், அதை அறியலாம். காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் தென்பட்டால், சில நேரம் இன்புளுவென்சா அல்லது கொரோனா தொற்றாக இருக்கலாம் என்றார்.
Discussion about this post