யாழ். தையிட்டி விகாரையில் இன்று நடைபெறும் கஜினமகா உற்சவத்திற்கு சென்ற பெரும்பான்மையின மக்களை நோக்கி சாபம்விடும் வகையில் இளம் குடும்ப பெண் ஒருவர் எழுப்பிய கேள்விகள் பேசுபொருளாகியுள்ளது.
தமக்கு சொந்தமான காணியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு சிங்கள மக்கள் ஆதரவு வழங்க கூடாது என இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண் வலியுறுத்தும் காணொளி சமூக ஊடகங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தையிட்டியில் சட்டவிரோதமாக விகாரைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பெண் அங்கு வந்த சிங்கள மக்களிடம் தனது ஆதங்கத்தை வெளிக்காட்டியுள்ளார்.
விகாரை அமைக்கப்பட்ட காணி உங்களுடையதா… இதற்கு காணி உறுதிப்பத்திரம் இருக்கிறதா எனக் கேள்வி எழுப்பிய குறித்த பெண் இந்த சட்ட விரோத விகாரைக்கு ஆதரவு வழங்க வேண்டாம் என சிங்கள மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நீங்கள் வெண்ணிற ஆடை அணிந்து பூக்களை கொண்டு செல்லுங்கள் ஆனால் காணி உரிமையாளர்கள் நாம் தற்போது வீதியில் இருக்கின்றோம்.
உங்களுக்கு புத்திரர்கள் இருக்கிறார்கள் தானே… நீங்கள் செய்யும் இந்த செயல் உங்கள் தலைமுறைக்கே சாபக்கேடாக மாறும் எனவும் கூறியுள்ளார்.
விகாரை அமைந்துள்ள காணி உங்களுடையதா… எங்கே இதற்கான காணி உறுதி பத்திரத்தை காட்டுங்கள் எனக்கூறிய அவர் இது தமிழ் மக்களுடைய பூர்விககாணி எனவும் வலியுறுத்தியுள்ளார்.
Discussion about this post