சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் தங்கியிருந்த காலப்பகுதியில் 67 மில்லியன் ரூபாவை விடுதிக்கான கட்டணமாக செலுத்தியுள்ளார் என்று அறிய முடிகின்றது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் அவரது மனைவி அயோமா ராஜபக்சவும் கடந்த 11ஆம் திகதி தாய்லாந்து செல்லும் வரை சிங்கப்பூரில் உள்ள மரினா பே சேண்ட்ஸ் விடுதியில் தங்கியிருந்தனர்.
அவர்களுக்கான விடுதி தங்குமிட கட்டணமான 67 மில்லியன் ரூபாவை அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவரான நிஸ்ஸங்க சேனாதிபதி செலுத்தியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது தாய்லாந்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி, அந்நாட்டிலுள்ள மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதற்கு தாய்லாந்து அரசாங்கத்திடம் அனுமதி கோரிய போதும், இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தங்கியிருக்கும் விடுதி வளாகத்தை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என தாய்லாந்து அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர் என்று தாய்லாந்தின் பேங்கொக் போஸ்ட் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.
Discussion about this post