உள்ளக வளி மாசடைவால் உலகம் முழுவதும் வருடாந்தம் 40 இலட்சத்துக்கு அதிகமானோர் உயிரிழக்கின்றனர் என மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் துசித சுகதபால தெரிவித்துள்ளார்.
கண்டியில் இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனத்தால் நடத்தப்பட்ட செயலமர்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பொலித்தீன் எரித்தல், வீட்டுக்குள் ஊதுபத்திகளை ஏற்றுதல், நுளம்பு சுருள்களை பற்றவைத்தல் போன்ற செயற்பாடுகள் வீட்டின் உட்புறத்திலும் வெளியிலும் வளி மாசினை ஏற்படுத்துகின்றன என்று அவர் சுட்டிக்காட்டினார்.
100 சிகரெட்டைப் பற்றவைப்பதன் மூலம் வெளிவரும் புகையில் உள்ள நச்சுத்தன்மையை விட ஒரு நுளம்பு சுருளில் இருந்து வெளிவரும் புகையில் நச்சுப் பொருளின் அளவு அதிகம் என்றும் அவர் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Discussion about this post