சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையிலிருந்து எழுந்துள்ள பிரச்சினைகள் மனசாட்சிப்படி வேலை செய்பவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தாது.
தற்போது சாவகச்சேரி விடயத்தில் வடக்கின் குட்டி மாபியாவை காத்துக்கொள்ளும் புத்திசாலித்தனங்களும், பழிவாங்கல்களும் ஏற்படகூடும் என அறிகுறிகள் வெளிப்பட்டுக்கொண்டாலும், கொழும்பு அதிகார மையத்திலிருந்து இதற்கு எதிரான சில அறிகுறிகள் வெளிப்பட தலைப்படுகின்றன.
அந்தவகையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தலைமையில் கூடிய சிறிலங்காவின் அமைச்சரவை கூட்டத்தில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பிரச்சினை குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த பிரச்சினைக்கு விசாரணைக்குழுவொன்றை அமைத்து விசாரணை செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு புதிய பதில் அத்தியட்கசரை நியமித்துள்ளமையானது, சில மாபியா முகங்களை காத்துக்கொள்ளும் நகர்வுகளாக உள்ளது.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் மட்டும் தான் இந்த பிரச்சினையா என்ற கேள்வியையும் தற்போது எழும்பியுள்ளது.
Discussion about this post