சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பணியகத்தால் கடந்த 12,13,14 ஆகிய திகதிகளில் ஆறு கிராம அலுவலர் பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட டெங்கு கட்டுப்பாட்டு களப் பரிசோதனையில், 67 இடங்களில் டெங்கு குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மந்துவில் கிழக்கு, மீசாலை கிழக்கு , கைதடி கிழக்கு, மட்டுவில் மத்தி, அல்லாரை , மீசாலை மேற்கு ஆகிய இடங்களில் உள்ள குடியிருப்புகள், அரச ,தனியார் பாடசாலைகள், கோவில்கள், கட்டிட நிர்மாணத் தளங்கள், வர்த்தக நிலையங்கள் உட்பட ஆயிரத்து 650 இடங்களில் களப் பரிசோதனைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டெங்கு குடம்பிகள் உருவாக கூடிய இடங்களைச் துப்பரவு செய்யுமாறு விடுத்த பணிப்பின் பேரில் குடியிருப்பாளர்பலர் உடனடியாகத் அவற்றைத் துப்பரவு செய்தனர். 98 இடங்களில் 15 நாள்கள் கால அவகாசம் வழங்கி சிவப்பு அறிவித்தல் ஒட்டியுள்ளனர்.
பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி தலைமையில் பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல சேவையாளர்கள் பொலிஸார், உள்ளூராட்சி சபையினர், பிரதேச செயலகத்தினர், டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்கள் ஆகியோர் களப் பரிசோதனையில் ஈடுபட்டனர்.
Discussion about this post