சாரதி அனுமதிப்பத்திரங்கள் விநியோக நிலுவை தொடர்பில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
சுமார் நான்கு லட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்கள் இன்னமும் விநியோகம் செய்யப்படாது நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த காலங்களில் சுமார் 850,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் விநியோகம் செய்யப்படாதிருந்தததாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிசாந்த அனுருத்த தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த எண்ணிக்கை தற்பொழுது நான்கு இலட்சமாக குறைக்கப்பட்டுள்ளதோடு, திணைக்களத்தின் பணியாளர்கள் இரவு பகலாக கடமையாற்றி நாளொன்றுக்கு சுமார் பத்தாயிரம் கடவுச்சீட்டுக்கள் வரை விநியோகம் செய்யப்படுகின்றது.
தபால் மூலம் சாரதி அனுமதிப்பத்திரங்களை அனுப்பி வைக்கும் போது கால தாமதம் ஏற்படுகிறது.எதிர்வரும் ஜூன் மாதமளவில் சாரதி அனுமதிப்பத்திர விநியோகத்தில் உள்ள கால தாமதம் நிவர்த்தி செய்யப்படும் என அவர் குறிப்பிட்டார். 1
Discussion about this post