புதிதாக சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான கட்டணங்கள், சாரதி அனுமதிப்பத்திரம் இருந்தால் அதைப் புதுப்பித்தல் அல்லது செல்லுபடியாகும் காலத்தை நீடித்தல் போன்றவற்றுக்கான கட்டணங்கள் ஆகியவை அதிகரிக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்த்தன, வர்த்தமானி மூலம் சாதாரண மற்றும் ஒரே நாள் சேவையின் கீழ்வரும் சாரதி அனுமதிப்பத்திர கட்டணங்களை திருத்தியமைத்துள்ளார்.
அதன்படி, ஒரு வகுப்புக்கான கற்றல் அனுமதி மற்றும் புதிய சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பக் கட்டணம், சாதாரண சேவையின் கீழ் 2 ஆயிரத்து 500 ரூபாவும் ஒரு நாள் சேவையின் கீழ் 3 ஆயிரத்து 500 ரூபாவும் ஒரே நேரத்தில் இரண்டு வகுப்புகளுக்கு சாதாரண சேவையின் கீழ்க் கட்டணம் 3 ஆயிரம் ரூபா மற்றும் ஒரே நாள் சேவைக்கு 4, ஆயிரம் ரூபாவுமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட வாகன வகுப்புகளுக்கு, சாதாரண சேவைகளின் கீழ் கட்டணம் 3 ஆயிரத்து 500 ரூபாவும் ஒரு நாள் சேவையின் கீழ் 4 ஆயிரத்து 500 ரூபாவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மோட்டார் போக்குவரத்து திணைக்களம் ஒரு வாகனத்துக்கு சாரதி அனுமத்திர நடைமுறைத் தேர்வுக்கு மீண்டும் விண்ணப்பிக்க ஆயிரம் ரூபாவும் அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post