2023 ஆம் ஆண்டு சாதாரண தர பரீட்சைக்கான செய்முறை பரீட்சைகள் எதிர்வரும் 9ம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த செய்முறை பரீட்சைகளில் 169,007 பரீட்சார்த்திகள் பங்குப்பற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், கிடைக்கப்பெற்றுள்ள பரீட்சை அனுமதி அட்டைகளில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டுமாயின் பரீட்சைகள் திணைக்களத்தின் பாடசாலை பரீட்சை அமைப்பு மற்றும் பெறுபேறுகள் கிளைக்கு வருகை தருமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
செய்முறை பரீட்சை
அத்துடன், பாடத்தின் எழுது பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் கட்டாயம் இந்த செய்முறை பரீட்சைக்கு தோற்ற வேண்டும்.
இதேவேளை, இரண்டு பகுதிகளுக்கும் தோற்றாத பரீட்சார்த்திகளுக்கு அந்தப் பாடம் தொடர்பான பெறுபேறுகள் வழங்கப்பட மாட்டாது எனவும் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
Discussion about this post