கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்றில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மயிரிழையில்
உயிர்தப்பியுள்ளார்.
இந்த சம்பவம் இன்று (03) மாலை 05.30 மணியளவில் கிளிநொச்சி- டிப்போ சந்திக்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்துச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியாவில் இருந்து வந்த கனரக பாரவூர்தி, வேகக் கட்டுப்பாட்டை இழந்து, போக்குவரத்துப் பொலிஸாரின்
சமிஞ்சைக்கு ஏற்ப, நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்களை மோதித் தள்ளியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
கனரக பாரவூர்தியின் அதிவேகம் காரணமாக, குறித்த மோட்டார் சைக்கிளில் 20 மீற்றர் தூரம் வரை இழுத்து
செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், கனரக பாரவூர்தியின் அதிகவேகத்தை அவதானித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர், மோட்டார்
சைக்கிளில் இருந்து குதித்து தெய்வாதீனமாக எவ்வித காயங்களும் இன்றி உயிர் தப்பியுள்ளார்.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவரும் அதேவேளை வீதிகளில் செல்லும்போது மிகுந்த அவதானத்துடன் செல்லுமாறும் பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
Discussion about this post