வடக்கு-கிழக்கின் நீதிக்கும் அமைதிக்குமான குருக்கள், துறவிகள் அமைப்பானது தென்னாபிரிக்க நிறவெறி நிறுவனக் கட்டமைப்பிற்கெதிராக, கறுப்பின
அடக்குமுறைக்கெதிராக போராடிய ஒரு விடுதலைப்
போராளியான பேராயர் டெஸ்மண்ட் டுட்டுவின் பயணம் முற்றுபெற்றதையிட்டு
ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் இவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது மட்டுமல்லாது சர்வதேச அரங்கில் அதற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தமையை நாம்
நன்றியுடன் நினைவு கூறுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அரசியல் தலைமைத்துவ வெறுமையில் அடக்குமுறைக்குட்பட்டோரின் குரலாக ஒலித்த
ஒரு குரல் மௌனித்துப் போய்விட்டது. என அவ்வறிக்கையில்
கூறப்பட்டுள்ளது.
Discussion about this post