கனடாவின் எட்மாண்டன் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் சர்வதேச ரீதியில் சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச விஞ்ஞான போட்டி ஒன்றில் குறித்த மாணவி சாதனையை படைத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
புற்றுநோயை தொடர்பான சிகிச்சை முறைமை ஒன்றை இந்த மாணவி ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளார்.
CAR T-cell therapy எனப்படும் புதிய மாற்று சிகிச்சை முறைமை ஒன்று குறித்து இந்த சிறுமி ஆய்வு நடத்தியுள்ளார்.
Old Scona Academic பாடசாலையின் தரம் 12 இல் கல்வி கற்கும் எலிசபெத் சென் என்ற மாணவியே இவ்வாறு சர்வதேச விஞ்ஞான விருதினை பெற்றுக் கொண்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட இளம் விஞ்ஞானி போட்டியில் இந்த மாணவி முதல் பரிசு பெற்றுக் கொண்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை இந்த போட்டி பிரஸல்ஸில் நடைபெற்றது.
பிராந்திய ரீதியிலும் தேசிய ரீதியிலும் நடைபெற்ற போட்டிகளில் முதலிடத்தை வென்று இந்த மாணவி ஐரோப்பாவிற்கு சென்று அங்கும் முதலிடத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.
புற்று நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து ஆய்வுகளை நடத்தி அதில் வெற்றி காண்பது தமது நோக்கம் என இந்த மாணவி தெரிவித்துள்ளார்.
உலக அரங்கில் கனடாவை பிரதிநிதித்துவம் செய்வதற்கு கிடைத்த சந்தர்ப்பம் பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக எலிசபெத் செயின் தெரிவித்துள்ளார்.
Discussion about this post