வவுனியாவில் (Vavuniya) காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சர்வதேச நீதி கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தால் பழைய பேரூந்து நிலையம் முன்பாக இன்று இந்த ஆர்ப்பாட்டம் (30) இடம்பெற்றுள்ளது.இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டோர் ”எமக்கு சர்வதேச நீதியே வேண்டும், எங்கே எங்கே பிள்ளைகள் எங்கே, ஓ.எம்.பி அலுவலகம் எமக்கு வேண்டாம், கையில் கொடுத்த பிள்ளைகளுக்கு மரண சான்றிதழ் எதற்கு, நாம் இழப்பீட்டை கோரவில்லை, கையில் தந்த எமது சிறுவர்கள் எங்கே” என எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
சர்வதேச நீதிஇதன்போது, கருத்து தெரிவித்த வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி ஜெனீற்றா (Jeṉirra), “எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது.
சர்வதேச நீதியே எமக்கு வேண்டும். ஓ.எம்.பி அலுவலகம் எமக்கு தேவையில்லை எனக் கூறிய போதும் அதனை இரகசியமாக எமது பகுதிகளில் நிறுவியுள்ளார்கள்.
அதிபர் ரணில் விக்ரமசிங்க
தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) கிராம அலுவலர் ஊடக ஓ.எம்.பி அலுவலகத்தின் வேலைகளை முன்னெடுத்துள்ளார். வாழ்வாதார உதவிகளை வழங்கி எமது போராட்டத்தை மழுங்கடிக்க முற்படுகிறார்கள்.
இது தொடர்பில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் விழிப்பாக இருக்க வேண்டும். எமக்கு நீதி வேண்டும். உயிர் உள்ளவரை நீதிக்காக நாம் போராடுவோம்” என தெரிவித்தார்.
Discussion about this post