சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியை இலங்கை டிசெம்பர் மாதம் எதிர்பார்த்துள்ளபோதும், அது சாத்தியமில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
முக்கிய இரு தரப்புக் கடனாளியான சீனா 20ஆவது கட்சி மாநாட்டில் ஈடுபட்டமை காரணமாக கொழும்புடன் கடன் மறுசீரமைப்புப் பேச்சுக்களை நடத்துவதில் ஏற்பட்ட காலதாமதமும் இதற்குக் காரணம் என்று இந்திய செய்தி நிறுவனமான “தி ஹிந்துஸ்தான்” தெரிவித்துள்ளது.
கடன் வழங்குநர்களான இந்தியாவும், ஜப்பானும் ஏற்கனவே கொழும்புடன் கடன் நல்லிணக்கம் மற்றும் மறுசீரமைப்புப் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளன. ஆயினும் சீனா இன்னமும் பேச்சுக்களில் ஈடுபடவில்லை.
அதனால் சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 மில்லியன் அமெரிக்க டொலரை எட்டு சம தவணைகளில் பெறுவதற்கு எதிர்வரும் மார்ச் மாதம் வரையில் இலங்கை காத்திருக்க வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார எதிர்காலம் மிகவும் இருண்ட நிலையில் உள்ளது என்றும், இலங்கை பெரும் அரசியல் கொந்தளிப்பை நோக்கிச் செல்கின்றது என்றும் “தி ஹிந்துஸ்தான்” தெரிவித்துள்ளது.
Discussion about this post