சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையினால் வழங்கப்பட்டுள்ள அனுமதி குறித்து மகிழ்ச்சி அடைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த இக்கட்டான தருணத்தில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் நமது சர்வதேச பங்காளிகள் அளித்த ஆதரவிற்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் இந்த உதவியினால் இலங்கையின் நிலையை மேம்படுத்துவதற்கும் சர்வதேச மூலதனச் சந்தைகளை அணுகுவதற்கும் இன்றியமையாததாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு முதலீட்டாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஏனைய விடயங்களுக்கு ஏற்ற நாடு என்பதை இலங்கை மீண்டும் நிரூபிக்கும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
Discussion about this post