இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் இணையவழி மூலம் இடம்பெற்ற முதலாவது கட்ட சுற்று பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பேச்சுவார்த்தையில் இலங்கையின் சார்பில் நிதி அமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இணைவழியில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு வோஷிங்டனில் இடம்பெறவுள்ளது. இதற்கு 18 ஆம் திகதி நிதி அமைச்சு குழுவினர் செல்லவுள்ளனர். அங்கு பேச்சுவார்த்தை 5 நாள்கள் இடம்பெறும்.
Discussion about this post