சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து ஒக்ரோபர் மாதம் வரை இலங்கைக்குக் கடன் கிடைக்க வாய்ப்பில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது, ஏனைய நட்பு நாடுகளிடமிருந்து நிதியைப் பெறுவதற்கு முயற்சிக்கப்படுகின்றது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடியானது தவறான நிர்வாகம், வரி குறைப்பு மற்றும் உரப்பிரச்சினை போன்றவற்றின் காரணமாக ஏற்பட்டது.
அதேநேரம், கொரோனத் தொற்று மற்றும் ரஷ்யா – உக்ரேன் போர் காரணமாக இந்நிலைமை மிக மோசமடைந்தது.-என்றார்.
Discussion about this post