மூடப்பட்ட மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்படவுள்ளது. குறித்த விமான நிலையம் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்று முதல் மத்தள விமான நிலையத்தில் சர்வதேச சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இலங்கையின் இரண்டாவது பெரிய விமான நிலையமாக நிர்மாணிக்கப்பட்டு திறக்கப்பட்ட மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையமானது, மாற்று விமான நிலையமாகவும், அவசர விமான தரையிறக்கங்களுக்காகவும்
பயன்படுத்தப்பட்டது.
இன்றைய தினம் சர்வதேச சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் முதலாவது விமானமாக ரெட் விங்ஸ் நிறுவனத்திற்கு
சொந்தமான போயிங் 777-200 ரக விமானம் 400க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மத்தள விமான நிலையத்திற்கு வருகை
தர உள்ளது.
குறித்த விமானமானது ரஸ்யாவில் இருந்து வருகை தர உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான விமான நிலையத்தில் ரெட் விங்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனமே விமான சேவைகளை
முன்னெடுக்கவுள்ளது.
Discussion about this post