காலி முகத்திடல் போராட்டக்களத்தில் நேற்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டமை சர்வதேச ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கை தொடர்பான செய்திக்கு ‘அரச எதிர்ப்பு போராட்ட முகாமை சுற்றிவளைத்த இராணுவம்’ என BBC செய்திச்சேவை தலைப்பிட்டுள்ளது.
அங்கு செய்தி அறிக்கையிட சென்ற BBC ஊடகவியலாளர் இராணுவத்தால் தாக்கப்பட்டுள்ளார் என்றும், அவரது தொலைபேசி பறிக்கப்பட்டு அதிலிருந்த காட்சிகள் அழிக்கப்பட்டுள்ளன என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது
‘இலங்கையின் போராட்ட முகாம்களில் இராணுவ சுற்றிவளைப்பு, தலைவர்கள் கைது’ என அல் ஜெசீரா செய்தி வௌியிட்டுள்ளது.
போராட்டக்கார்களை மிலேச்சத்தனமாக தாக்கிய இராணுவத்தினர் ஜனாதிபதி செயலகத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் கொழும்பில் அரச காணியை கைப்பற்றி அமைக்கப்பட்டிருந்த போராட்ட முகாமை வௌ்ளிக்கிழமை அதிகாலை சுற்றிவளைத்த இலங்கையின் இராணுவத்தினர் அதன் ஒரு பகுதியை அகற்றியதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது.
Discussion about this post