ஈழத்தை சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் ஆசியா – பசுபிக் – ஆபிரிக்கா பளு தூக்கும் போட்டியில் சாதனை படைத்துள்ளார்.
யாழ்ப்பாணம் – தென்மராட்சி பிரதேசத்தைச் சேர்ந்த சற்குணராசா புஷாந்தன் என்பவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.
ஹொங்ஹொங்கில் நடைபெற்ற இப்போட்டியில், ஸ்குவாட் முறையில் 325 கிலோவைத் தூக்கி மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.
இவர் பல போட்டிகளில் கலந்து கொண்டு பல சாதனைகளை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த வருடம் பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற பளு தூக்கும் போட்டியில் 25 மாவட்டங்களையும் சேர்ந்த 44 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
அப்போட்டியில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து ஒரே ஒருவராக கலந்து கொண்ட இவர், மூன்று பிரிவுகளில் நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் வென்று, தங்க பதக்கங்களை சுவீகரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Discussion about this post