சர்வ கட்சி ஆட்சியை அமைப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்று தெரிவித்துள்ள நீதி அமைச்சர் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச சர்வகட்சி ஆட்சியில் சேர விரும்பும் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, சர்வ கட்சி ஆட்சிக்கு ஏதேனும் அரசியல் கட்சி எதிர்ப்புத் தெரிவித்தால் எங்களுக்கு வேறு வழியில்லை. சேர விரும்பும் அரசியல் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைப்போம்.
இது அனைத்துக் கட்சியாக இல்லாமலும் இருக்கலாம். ஆனால், பல கட்சிகளின் ஆதரவைப் பெற முயற்சிக்கின்றோம். சர்வகட்சி ஆட்சியை அமைப்பதற்கும், புதிய அரசமைப்பைக் கொண்டு வருவதற்கும் தொடர்பு இல்லை என்றார்.
Discussion about this post