புதிய இணைப்பு
இலங்கை மத்திய வங்கி மோசடி, ஏப்ரல் 21 தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்கள் போன்று மதுபானசாலை அனுமதி பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் பட்டியலும் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இது தெடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் “300 இலட்சம் ரூபாய் முதல் 400 இலட்சம் ரூபாவுக்கு மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களை விற்பனை செய்தவர்கள் உள்ளனர்.அவர்களின் விபரங்கள் எம்மிடம் உள்ளது. ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்கள் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டமை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.அத்துடன் அவ்வாறான சகல தரப்பினர் தொடர்பான விபரங்களும் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப்படும்” எனத் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
முதலாம் இணைப்புமதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.இதற்கான உத்தரவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anurakumara Dissanayake) வழங்கியுள்ளார்.நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு மதுபான விற்பனை நிலையத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.
அனுமதி பத்திரங்கள் ரத்துதமக்கு ஆதரவு வழங்கிய தரப்பினருக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் (Anurakumara Dissanayake) இந்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் அண்மைக்காலத்தில் வழங்கப்பட்ட மதுபான விற்பனை அனுமதி பத்திரங்களை ரத்துச் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post