உலகளவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.நாளுக்கு நாள் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதற்கு பரம்பரை முதன்மையான காரணமாக இருந்தாலும் தற்போதைய ஆரோக்கியமற்ற மற்றும் உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கங்களும் முக்கிய காரணங்களாக உள்ளன.
இந்த வகை உணவுகளை சிறிது உட்கொண்டாலும் அவை இரத்த சர்க்கரை அளவு மற்றும் இன்சுலின் அளவு சட்டென உயர்த்தி உடலினுள் சிக்கலை ஏற்படுத்த தொடங்கிவிடும்.
சர்க்கரை நோய் இருப்பவர்கள் உணவில் மிகவும் கவனமாக இல்லாவிட்டால் அது இதய நோய், சிறுநீரக நோய் மற்றும் குருட்டுத்தன்மை போன்ற நாள்பட்ட ஆரோக்கிய பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரித்துவிடுவதாக கூறப்படுகிறது.
இப்படி அதிகரிப்பதற்கு உணவுகள் மற்றும் பானங்கள் தான் காரணமாக இருக்கும் என சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சர்க்கரை நிறைந்த உணவுகள்
சர்க்கரை நிறைந்த உணவுகளை அதிகளவில் உட்கொள்வது சர்க்கரை நோய், இதய நோய் மற்றும் உடல் பருமன் ஆகியவற்றின் அபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
அதுவும் ஏற்கனவே சர்க்கரை நோயைக் கொண்டவர்கள் தங்கள் உணவில் சர்க்கரையை மிதமான அளவில் தான் சேர்க்க வேண்டும்.
அதுவும் பெண்கள் ஒரு நாளைக்கு 25 கிராம் அல்லது 6 டீஸ்பூன் சர்க்கரையையும், ஆண்கள் ஒரு நாளைக்கு 36 கிராம் அல்லது 9 டீஸ்பூன் சர்க்கரையையும் தான் உட்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முடிந்தவரை 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் சர்க்கரை நோய் வராமல் இருக்க தினமும் உட்கொள்ளும் சர்க்கரையின் அளவை குறைத்துக் கொள்வது நல்லது.
ப்ளேவர்டு காபி
காபி உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகின்றன. ஆனால் இது சர்க்கரை நோயின் அபாயத்தை அதிகரிக்கும்.
ஏனெனில் மற்ற சர்க்கரை நிறைந்த பானங்களைப் போன்றே காபியிலும் வெற்று கலோரிகள் அதிகமாகவும் வேறு எந்த ஒரு ஊட்டச்சத்துக்களும் இல்லை.
எனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த வகை காபியை குடித்து வந்தால் அதில் உள்ள வெற்று கலோரிகளால் உடல் பருமன் அதிகரிப்பதோடு சர்க்கரை நோயும் தீவிரமாகும்.
ட்ரான்ஸ் கொழுப்புகள் நிறைந்த உணவுகள்
ட்ரான்ஸ் கொழுப்புக்கள் உடல் ஆரோக்கியத்தை மிகவும் மோசமாக பாதிக்கக்கூடியவை.
இந்த வகை கொழுப்புக்களை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் அது இதய நோய், சர்க்கரை நோய் மற்றும் பிற ஆரோக்கிய பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கும்.
என்ன தான் ட்ரான்ஸ் கொழுப்புகள் நேரடியாக இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காவிட்டாலும், உடலினுள் வீக்கத்தை அதிகரிப்பது, இன்சுலின் எதிர்ப்பை அதிகரிப்பது, தொப்பையை உண்டாக்குவது, உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ரால் அளவை குறைப்பது போன்றவற்றின் மூலம் இரத்த சர்க்கரை அளவை உயர்த்துகிறது.
எனவே ட்ரான்ஸ் கொழுப்புக்கள் நிறைந்த ஐஸ் க்ரீம், சாக்லேட், பிஸ்கட், கேக், செரில்கள், பர்கர், பிரட், எண்ணெயில் பொரித்த உணவுகள், பிட்சா போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
ஆல்கஹால்
தற்போது ஆல்கஹால் அருந்துவது என்பது ஒரு ஃபேஷனாகிவிட்டது. ஆண்கள், பெண்கள் என இருபாலருமே சகஜமாக மது அருந்துகிறார்கள்.
ஆனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் மது அருந்தினால் அது நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடும்.
எப்படியெனில் ஆல்கஹாலானது கல்லீரலில் க்ளுக்கோஸை உற்பத்தி செய்யும் திறனை பாதித்து இரத்த சர்க்கரை அளவை மிகவும் குறைத்துவிடும்.
மேலும் சர்க்கரை நோய்க்கு மருந்து எடுப்பவர்கள் ஆல்கஹாலை அருந்தும் போது அந்த மருந்துகளின் செயல்பாட்டில் இடையூறை ஏற்படுத்தி நிலைமையை மோசமாக்கக்கூடும்.
Discussion about this post