சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை இந்த மாத இறுதிககுள் அல்லது ஓகஸ்ட் மாதம் முதல் வாரத்துக்குள் குறைக்க முடியும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
அடுத்த நான்கு வாரங்களில் இலங்கைக்கு 33 ஆயிரம் மெற்றிக்தொன் சமையல் எரிவாயு கிடைக்கும். திட்டமிட்டபடி எரிவாயு இறக்குமதி நடந்தால் நாளாந்தம் ஒரு லட்சத்து 12 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விடுவிக்க முடியும் என்று நம்புகின்றேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
குடியிருப்பாளர்களுக்குச் சமாந்தரமாக வெதுப்பகங்கள், உணவகங்கள் மற்றும் சிறு வியாபாரிகளுக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விடுவிக்கப்படும். அடுத்த 4 மாதங்களுக்கான சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post