கொழும்பின் சில பகுதிகளில் இன்று சமையல் எரிவாயு கோரி மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
மட்டக்குளி, புறக்கோட்டை பஸ் நிலையம் போன்ற இடங்களில் முன்னெடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தால் வீதிப் போக்குவரத்துக்கள் தடைப்பட்டன.
இலங்கை முழுவதும் தற்போது சமையல் எரிவாயுவுக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது. எரிவாயு சிலிண்டர்களைப் பெறுவதற்காக மக்கள் நாள் கணக்காக நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.
ஆயினும் தங்களிடம் போதிய எரிவாயு கையிருப்பு இல்லை என்று சில தினங்களின் முன்னர் லிட்ரோ நிறுவனம் தெரிவித்திருந்தது.
Discussion about this post