நாட்டில் எயிட்ஸ் உட்பட சமூக வியாதிகளைப் பரிசோதிப்பதற்கான உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமூக வியாதிகள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் எலிசா பரிசோதனைக்கான உபகரணங்களே பற்றாக்குறையாக காணப்படுகின்றது.
அதனால் இந்தப் பரிசோதனைகளை கைவிட அல்லது தாமதிக்க நேர்ந்துள்ளது என்று இலங்கை ஆய்வு கூட தொழில்நுட்ப வல்லுனர் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
பரிசோதனைக்கான உபகரணங்கள் பற்றாக்குறை காரணமாக ஏனைய சமூக வியாதிகளைக் கண்டறிவதிலும் தடங்கல் நிலை ஏற்படலாம் என்றும் அதனால் எதிர்காலத்தில் எயிட்ஸ் மற்றும் சமூக வியாதிகள் பரவலைக் கட்டுப்படுத்துவதில் பெரும் அபாய நிலைமை ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, எயிட்ஸ் நோய்த் தொற்றுக்குள்ளான தாயிடமிருந்து பிறக்கும் குழந்தைக்கு எயிட்ஸ் நோய் தொற்று ஏற்படுவதைத் தடுப்பதில் இலங்கை முன்னர் சர்வதேச மட்டத்தில் வெற்றி பெற்றிருந்தது.
Discussion about this post