சமூக வலைத்தளங்கள் இளைஞர்களிடையே மனநல பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் காணப்படுவதால் அனைவரும் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சமூக ஊடகங்கள் “பாதுகாப்பானது என்று நிரூபிக்கப்படவில்லை” என்று எச்சரிக்கை செய்யும் முத்திரையை பயன்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவல்களை அமெரிக்க (United States) மருத்துவரான விவேக் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
எச்சரிக்கை முத்திரை
அவர் மேலும் தெரிவிக்கையில், அமெரிக்காவில் 13 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களில் 95 சதவீதமானோர் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் அமெரிக்காவில் செயல்படும் அனைத்து சமூக வலைத்தளங்களுக்கும் எச்சரிக்கை முத்திரையினை வெளியிடுமாறு விவேக் மூர்த்தி அமெரிக்க காங்கிரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
Discussion about this post