சமூக வலைத்தளங்களில் வெளிவரும் போலி கடிதம் தொடர்பில் காவல்துறை தலைமையகம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.சமூக வலைத்தளங்களில் மஞ்சள் பின்னணியில் நீல நிற காவல்துறை கையொப்பத்துடன் காவல்துறையின் உத்தியோகபூர்வ சின்னத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள போலி கடிதம்மொன்று உலா வருகின்றது.இந்த விடயம் தொடர்பில் காவல்துறை மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவிக்கையில், “2024 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் திகதி வெளியிடப்பட்டதாகத் தோன்றும் வகையில் இந்த கடிதம் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
போலியான கடிதம்இக்கடிதமும் அதன் உள்ளடக்கமும் முற்றிலும் போலியான கடிதம் எனவும், இலங்கை காவல்துறையினரோ அல்லது அதனுடன் இணைந்த நிறுவனங்களினாலோ இவ்வாறான கடிதம் எதுவும் வெளியிடப்படவில்லை. எனவே பொதுமக்கள் ஏமாற வேண்டாம்.
மேலும் போலி கடிதம் மற்றும் இணையத்தில் கடிதம் பிரசுரம் செய்யப்பட்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.”என தெரிவித்துள்ளார்.
Discussion about this post