இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய வார இறுதி நாள்களில் மின்வெட்டை நடைமுறைப்படுத்தப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
நாளை (12) முற்பகல்10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையான காலப்பகுதியில் P, Q, R, S, T, U, V, W வலயங்களில் ஒரு மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்
அந்த வலயங்களில் மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலம் 15 நிமிடங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
A, B, C, D, E, F, G, H, I, J, K, L வலயங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் இரண்டரை மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
அந்த வலயங்களில் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
P, Q, R, S, T, U, V, W வலயங்களில் நாளைமறுதினம் (13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
A, B, C, D, E, F, G, H, I, J, K, L வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதியில் 2 மணி நேரமும், மாலை 5 மணி முதல் 10 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணி நேரம் 15 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, வார இறுதி நாள்களில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாது என்று முன்னர் அரசாங்கம் தெரிவித்திருந்தது.
Discussion about this post