சந்தையில் தேங்காய் எண்ணெய் பற்றாக்குறையை செயற்கையாக உருவாக்க முயற்சி நடப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் தேங்காய் எண்ணெயில் விஷம் கலந்த பாமாயிலை கலந்து அதிக விலைக்கு விற்கும் கும்பல் இருப்பதும் தெரியவந்துள்ளது.
தற்போது சந்தையில் ஒரு போத்தல் தேங்காய் எண்ணெய் 500 ரூபாய் முதல் 550 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
தேங்காய் எண்ணையின் விலையை விட அதிக விலைக்கு நச்சு பாமாயிலை விற்கும் மோசடி நடந்து வருவதாகவும், தேங்காய் எண்ணெயுடன் பாமாயிலை கலந்து தேங்காய் எண்ணெயின் விலையை அதிகரிக்கத் தயாராகி வருவதாகவும் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் என கூறிக்கொள்ளும் சிலர் தேங்காய் எண்ணெயின் விலையை அதிகரிக்க முயற்சிப்பதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
எனினும் சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 120 முதல் 140 ரூபா வரை அதிகரித்துள்ளது.
Discussion about this post