சட்டமா அதிபர் பதவியிலிருந்து தாம் ஓய்வுபெற்றுள்ளதாக சஞ்சய் ராஜரத்தினம் தெரிவித்தார்.
அவரது சேவைக்காலத்தை 6 மாதங்களுக்கு நீடிக்க ஜனாதிபதி பரிந்துரை செய்ததுடன், அந்த பரிந்துரைக்கு அரசியலமைப்பு பேரவை இரண்டு சந்தர்ப்பங்களில் அனுமதி மறுத்தது.
சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவை நீடிப்பு தொடர்பில் ஜனாதிபதியின் பரிந்துரை மேலதிக வாக்குகளால் நிராகரிக்கப்பட்டதையடுத்து, அது தொடர்பில் மீள ஆராய்வதற்காக அரசியலமைப்பு பேரவை நேற்று மாலை கூடியது.
சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று மாலை 6 மணிக்கு ஆரம்பமான கூட்டம் 4 மணித்தியாலங்கள் நீடித்துள்ளது.
60 வயது முழுமையடைந்ததன் பின்னர் சட்டமா அதிபரின் சேவை நீடிப்பை உறுதிப்படுத்துவதற்கான அதிகாரம் தமக்கு இல்லை என இதன்போது தீர்மானிக்கப்பட்டதாக அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
அதற்கமைய, சட்டமா அதிபர் தொடர்பான அரசியலமைப்பு பேரவையின் தீர்மானம் நேற்றிரவு ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post