சட்டத்தை நடைமுறைப்படுத்தும் துறைகளில் சிறுபான்மை மக்களின் பங்களிப்பை
அதிகரிக்க வேண்டும் எனவும் , பயங்கரவாத தடை சட்டத்தில் திருத்தங்களை
முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள்
பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுடனான சந்திப்பில் பிரித்தானிய
உயர்ஸ்தானிகர் ஷாரா ஹல்டன் வலியுறுத்தியுள்ளார்
பொதுமக்கள் பாதுகாப்பை வலுப்படுத்தும் புதிய சட்ட திருத்தங்கள்
இலங்கைக்கு அவசியம் என்ற காரணிகளையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைசர் சரத் வீரசேகரவிற்கும் இலங்கைக்கான
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஷாரா ஹல்டனுக்கும் இடையில் கடந்த
வெள்ளிக்கிழமை முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது,
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இரு தரப்பு
நட்புறவு மற்றும் பாதுகாப்பு சார் காரணிகள் கலந்துரையாடப்பட்டிருந்தது.
குறிப்பாக நீண்டகால ஒத்துழைப்பு செயற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு
ரீதியிலான ஒத்துழைப்பு செயற்பாடுகள் குறித்து இலங்கைக்கான பிரித்தானிய
உயர்ஸ்தானிகர் ஷாரா ஹல்டன் தமது தரப்பு காரணிகளை எடுத்துக்கூறியுள்ளார்.
Discussion about this post