பெறுமதி சேர் வரி 15 வீதமாக அதிகரிக்கப்பட்டமை மற்றும் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் மின் சாதனங்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன.
முன்னர் 3 ஆயிரத்து 800 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட 100 மீற்றர் கபில மற்றும் நீல நிற கம்பியின் ஓர் உருளை தற்போது 7 ஆயிரத்து 600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. சராசரியாக 70 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஒரு மின்குமிழ் தற்போது 200 ரூபாவாக உயர்ந்துள்ளது.
அதேபோன்று, பிரதான மின்சுற்றுடன் இணைக்கப்பட்டுள்ள தடையிகளின் விலையும் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
அந்த உதிரிபாகங்கள் பொருத்தப்பட்டுள்ள பிரதான மின்சுற்று தாங்கிகள் முன்பு சுமார் 700 ரூபாவுக்கு விற்கப்பட்டாலும், தற்போது ஆயிரத்து 300 ரூபாவுக்கு மேல் விற்கப்படும் சந்தர்ப்பங்களும் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.
Discussion about this post