Friday, May 30, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

சஜித் பிரேமதாச ஜனாதிபதியானால் மலையக மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சி! இராதாகிருஷ்ணன் எம்.பி சுட்டிக்காட்டு

August 28, 2024
in இலங்கை, ஏனையவை, முக்கியச் செய்திகள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

சஜித் பிரேமதாச (Sajith Premadasa) ஜனாதிபதியானால் மலையக மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும் என நுவரெலியா (Nuwara Eliya) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் (Velusami Radhakrishnan) தெரிவித்துள்ளார்.மலையக மக்கள் முன்னணி ஏற்பாடு செய்த மக்கள் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “அழிவை நோக்கி செல்கின்றவர்களுக்கு முதலில் ஏற்படுவது புத்திசுவாதீனமாகும். அவ்வாறான செயல்பாடே இன்று நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றது

சஜித் பிரேமதாசஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து பிரிந்து சென்ற ஒரு சிலர் நான் கட்சி தாவப்போவதாகவும், அதற்கான திகதியையும் குறிப்பிடுகிறார்கள். இது புத்திசுவாதீனம் இல்லாதவர்கள் அழிவை நோக்கி செல்கின்ற ஒரு பயணத்தின் கட்டமாகும்.

நாம் எந்த காரணம் கொண்டும் கட்சி மாறுவதற்கோ விலை போவதற்கும் தயாராக இல்லை. நாம் என்றும் சஜித் பிரேமதாசவுடன் பயணிப்போம். 2019ம் ஆண்டு ஐக்கிய மக்கள் சக்தி கட்சி ஆரம்பிப்பதற்கு மலையக மக்கள் முன்னணியும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் முன்நின்று செயற்பட்டது.இதனால் தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து யாரோ ஒருத்தர் பணத்திற்காக விலை போனதால், நானும் அவ்வாறு கட்சியிலிருந்து வெளியேறி செல்வேன் என சொல்வது கேலி கூத்தான விடயமாகும்.

மலையக மக்கள்அவர் சொன்ன விடயம் முற்றிலும் தவறான ஒரு கருத்தாகும். அவர் விருப்பத்திற்கு எதை கூறினாலும் அது நடக்காது. எங்களுக்கு அப்படி அவரை போல் கட்சி தாவும் அவசியம் இல்லை. தற்போதைய ஆய்வுகளின் படி சஜித் பிரேமதாச முன்னிலையில் உள்ளார்.

அடுத்தது அனுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) இருக்கின்றார். ஆனால் ரணில் விக்கிரமசிங்க பட்டியலிலேயே இல்லை. எனவே, மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.சஜித் பிரேமதாச மலையக மக்கள் தொடர்பில் அதிகமான கரிசனை காட்டி வருகின்றார். அவர் நாடாளுமன்றத்தில் மலையக மக்கள் எதிர்கொள்ளும் சம்பள பிரச்சினை, வீடு பிரச்சினை, காணி பிரச்சினை, பொருளாதார பிரச்சினை, சுகாதார பிரச்சினை போன்ற விடயங்களை முன்கொண்டு வந்துள்ளார்.எனவே, சஜித் பிரேமதாச ஜனாதிபதியானால் மலையக மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும்” என்றார்.

Previous Post

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சஜித்திற்கு வழங்கியுள்ள பதில்

Next Post

பிரபல போதைப்பொருள் வியாபாரியின் மகன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

Next Post
பிரபல போதைப்பொருள் வியாபாரியின் மகன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

பிரபல போதைப்பொருள் வியாபாரியின் மகன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.