ஐக்கிய மக்கள் சக்தியின் (Samagi Jana Balawegaya) தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தலைமையில் அமையும் அரசாங்கத்தில் யார் பிரதமர் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் தரப்பு வெற்றியீட்டினால், பிரதமர் பதவி ரஞ்சித் மத்துமபண்டாரவிற்கு (Ranjith Madduma Bandara) வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தொகுதிஐக்கிய மக்கள் சக்தியின் பொது செயலாளராக ரஞ்சித் மத்துமபண்டார கடமையாற்றி வருகின்றார்.
ரஞ்சித் மத்தும பண்டாரவின் தேர்தல் தொகுதியான மொனராகலை (Monaragala) மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி ஆதரவாளர்களும் இந்த விடயம் பற்றி தெரிவித்துள்ளனர்.இதேவேளை ஏனைய கட்சிகள் தங்களது அரசாங்கத்தின் பிரதமர் யார் என்பது பற்றிய பேச்சுக்களை இதுவரையில் முன்னெடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Discussion about this post