எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆட்சிப் பொறுப்பை ஏற்றால் அவருக்கு ஆதரவு வழங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர நேற்று விடுத்தார்.
நாட்டில் அரசியல் நெருக்கடி உருவாகியுள்ளது. பிரதமர் பதவியை ஏற்குமாறு சஜித் பிரேமதாஸவுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். அந்த அழைப்பை அவர் ஏற்க வேண்டும். சஜித் பிரேமதாஸ பிரதமரானால் எமது கட்சி முழு ஆதரவையும் வழங்கும்.
ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்று நிபந்தனை முன்வைப்பது ஏற்புடையது அல்ல என்று தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
Discussion about this post