இந்த நெருக்கடியான நேரத்தில் நமது பாரம்பரிய அரசியல் கலாசாரத்தை ஒதுக்கிவிட்டு, எரியும் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க கைகோர்ப்போம் வாருங்கள் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இடைக்கால அரசாங்கத்தில் ஐக்கிய மக்கள் சக்தி அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்காது என்று அறிவித்துள்ள நிலையில், ரணில் விக்கிரமசிங்க கடிதம் மூலம் இன்று இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
இந்த நெருக்கடியிலிருந்து மீண்டெழ ஒன்றிணைந்து செயல்பட, அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருக்க உங்களை அழைக்கிறேன் என்று ரணில் விக்கிரமசிங்க கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post