புத்தளம் உடப்பு பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவரது கைப்பையில் வைக்கப்பட்டிருந்த 22 லட்சம் ரூபா பெறுமதியான 13 பவுண் தாலி கொடியை கொள்ளையிட்டதாக கூறப்படும் அதே பாடசாலையில் பணிப்புரியும் தொண்டர் ஆசிரியையை தாம் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
27 வயதான தொண்டர் ஆசிரியையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். ஆசிரியை செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை நடத்திய உடப்பு பொலிஸார் தொண்டர் ஆசிரியையை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரான ஆசிரியை வழங்கிய தகவலுக்கு அமைய பாடசாலைக்கு அருகில் புதைக்கப்பட்டிருந்த தாலி கொடியை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
தாலி கொடியின் உரிமையாளரான ஆசிரியை கடந்த 25 ஆம் திகதி வழமைப் போல் தாலி கொடியை கழற்றி கைப்பைக்குள் வைத்து விட்டு கற்பித்து கொண்டிருந்த போது அதிபரின் அழைப்புக்கு அமைய அதிபரின் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
இதன் பின்னர் திரும்பி வந்து கைப்பையை பார்த்த போது, அதில் தாலி கொடி இருக்கவில்லை என்பதால், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய தயாராகியுள்ளார்.
அப்போது சந்தேக நபரான தொண்டர் ஆசிரியை பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்ய வேண்டாம் எனவும் அது பாடசாலைக்கு அவப்பெயர் எனவும் கூறியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post