அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) சமர்ப்பித்துள்ள
அறிக்கை தொடர்பான சிறப்பு விவாதத்தை எதிர்வரும் 22ஆம் திகதி
பாராளுமன்றத்தில் நடத்தை கோப் குழு தீர்மானித்துள்ளது.
நாட்டின் நிதி நிர்வாகத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பில் குறித்த
விவாதத்தின் போது தகவல்கள் வெளிவரும் என்று கோப் குழுவின் தலைவர் தினேஷ்
குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு சமீபத்தில் பல அறிக்கைகளை
சபையில் சமர்ப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post