ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து, ராஜபக்சக்களின் அரசியல் கோட்டையான தங்காலை நகரில் நேற்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
‘கோ ஹோம் கோத்தா’ என கோஷம் எழுப்பும் போராட்டக்காரர்களுக்கு, பதிலடி கொடுக்கும் வகையில் ‘வீ வோன்ட் கோட்டா’ என அவர்கள் முழக்கமிட்டனர்.
அத்துடன், கண்டி, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளிலும் ஜனாதிபதிக்கும், அரசுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ராஜபக்சக்களின் விரசுவாகிளும், ஆளுங்கட்சியினரும், அவர்களால் திட்டமிட்ட அடிப்படையில் அழைத்துவரப்பட்ட மக்களும் போராட்டத்தில் பங்கேற்றனர்.
அதேவேளை, ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடல் வளாகத்தில் நேற்று 2ஆவது நாளாகவும் போராட்டம் நடத்தப்பட்டது.
கொட்டும் மழைக்கு மத்தியிலும் மக்கள் அணிதிரண்டு, கோட்டாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
Discussion about this post