ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக சிலாபத்தில் ஊர்வலம் நடத்தியவர்கள் மீது மக்கள் தாக்குதல் நடத்திக் கலைத்துள்ளனர்.
பொலிஸாரும், இராணுவத்தினரும் தலையிட்டு மோதலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
ஆளும் கட்சிக்கு ஆதரவாளர்கள் சிலாபம் நகரில் இருந்து புத்தளம் நகரை நோக்கி ஊர்வலமாகச் சென்ற போது, ஜனாதிபதி கோத்தாபயவுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபடும் தரப்புடன் மோதல் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கு ஆதரவாக ஊர்வலம் சென்றவர்கள் மீது கல் வீச்சு நடத்தப்பட்டுள்ளது.
இதனால் சிலாபம் நகரில் பதற்றமான நிலைமை காணப்பட்டது. இந்த சம்பவத்தில் இரண்டு வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து முறுகல் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
Discussion about this post