ஜனாதிபதிக் கதிரையில் கோத்தாபய ராஜபக்ச இருக்கும் வரைக்கும் இலங்கைக்குச் சர்வதேசம் உதவ முன்வராது. பொருளாதார நெருக்கடியும் தீராது மேலும் உக்கிரமடையும் என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச உடனடியாகப் பதவி விலகி வீடு சென்றால்தான் தற்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியும் என்று தெரிவித்தார்.
கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதிப் பதவியில் இருக்கும் வரைக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவாலும் ஒன்றும் செய்ய முடியாது. அதனால்தான் பிரதமர் ரணில் நாளாந்தம் ஊடகங்கள் முன்னிலையில் பிரச்சினைகளை மாத்திரம் கூறுகின்றாரே தவிர அந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்வைக்கின்றார் இல்லை என்றும் சந்திரிகா குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post