எரிபொருள் விநியோக நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக நாடு முழுவதும் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் விசேட பணிப்புரைக்கு அமைய இராணுவம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிரதான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து வெளியேறும் எரிபொருள் பவுஸர்கள் உரிய முறையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களைச் சென்றடைகின்றனவா என்பதை இராணுவத்தினர் கண்காணிப்பர் என்று இராணுவத் தளபதி கூறினார்.
அதேவேளை, நாட்டில் தற்போதும் எரிபொருள்களுக்கு தட்டுப்பாடு காணப்படுகின்றது. மக்கள் நீண்ட நேரம் வரிசைகளில் நின்றே எரிபொருளைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.
Discussion about this post