முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்குச் சட்டத்தின் மூலம் கிடைக்கும் சலுகைகள் மற்றும் வசதிகள் கோத்தாபய ராஜபக்சவுக்கும் வழங்கப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி ரோஹினி மாரசிங்க மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி நிமல் கருணாசிறி ஆகியோரின் கையொப்பத்துடன் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிக்கு சட்டரீதியாக உரிமையுள்ள பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து உத்தரவாதம் இல்லாமல் கோத்தாபய ராஜபக்ச நாடு திரும்ப முடியாது என முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
எந்தவொரு குடிமகனும் தனது நாட்டுக்குத் திரும்புவதற்கு அரசமைப்பால் உறுதிப்படுத்தப்பட்ட உரிமைகள் உள்ளன. முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவர் நாடு திரும்புவதற்கு தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று ஆணைக்குழு ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கிறது என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post