ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவியில் இருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தி, கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட 11 பேர் நேற்றுக் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
நேற்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு ஹிருணிகா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அங்கிருந்த பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைதுசெய்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அந்தப் பகுதியில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் ஒன்றுசேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதிக்குள் போராட்டக்காரர்கள் நுழைய முற்பட்டபோது பொலிஸார் அவர்களை நோக்கி நீர்த்தாரைப் பிரயோகம் மற்றும் கண்ணீர்ப் புகைத் தாக்குதலை நடத்தினர். அதனால் அந்தப் பகுதியில் பதற்றமான நிலைமை நிலவியது.
Discussion about this post