எதிர்வரும் 17ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும்போது ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்துக்கு எடுத்து வாக்கெடுப்பு நடத்துவது என்று இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கட்சித் தலைவர்களின் கூட்டம இன்று நாடாளுமன்றக் கட்டடக் குழு அறையில் சபாநாயகர் தலைமையில் நடைபெற்றது.
எதிர்வரும் 17ஆம் திகதி திட்டமிட்டபடி நாடாளுமன்ற அமர்வை நடத்துவது என்றும், உடனடியாக பிரதி சபாநாயகர் தெரிவை மேற்கொள்வது என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்படது.
நிலையியல் கட்டளைகளை இரத்துச் செய்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதித்து அன்று மாலையே வாக்கெடுப்புக்கு விடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்ற தீர்மானத்திலேயே நாட்டு மக்களும், எதிர்க்கட்சிகளும் உள்ளன என்று தெரிவித்தார்.
Discussion about this post