இலகு ரயில் திட்டம் கடந்த அரசாங்கத்தால் ஒருதலைப்பட்சமாக இரத்துச் செய்யப்பட்டமை தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளார்.
இது தொடர்பான அறிக்கை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி. விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
ஜப்பானிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 15.7 கிலோமீற்றர் தூரத்தில் 16 நிலையங்களை உள்ளடக்கிய திட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பணித்திருந்திருந்தார்.
இது போக்குவரத்து நெரிசலுக்கு “இலாபகரமான தீர்வு” அல்ல எனவும் தெரிவித்திருந்தார். அதையடுத்து அந்தத் திட்டம் நிறுத்தப்பட்டது. அதனால் இலங்கைக்கும், ஜப்பானுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது.
Discussion about this post