முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உட்பட 7 பேரை கைதுசெய்யவேண்டும் என்று கோரி கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணி சானக பெரேரா இந்த மனுவைத் தாக்கல் செய்யத்துள்ளார்.
குற்றவியல் அச்சுறுத்தலில் ஈடுபடுவதற்கான சதியில் ஈடுபட்டமை, காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகையின் முன்னால் அமைதியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கு உதவியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 7 பேரையும் கைது செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் உள்ளது.
Discussion about this post